Tuesday, November 1, 2011

how painful to see a child...!

how painful to see a child..!
&
how painful to see a child
bursting with enthusiasm
in shouts of joy and gurgling laughter
over dancing hands and jumping feet
suddenly through an adamantine demand
catapulting into trajectories of mad anger
indulging in all tantrums of ugly behaviour-
o shattering all the goodwill of our hearts !
----s.chandra kalaadar

Monday, October 31, 2011

it is on the seashores the languages wither.

it is on the seashores the languages wither.
&
the countless wavelets that snake on the sandy shores
generate the 'hahas' and the 'hohos' from the delighted kids;
sure i am ,they know the sweet names of all these kids
and shake hands with toothy smile with the hiss of kisses abound
and liberal gifts of silvery shells ,their worth the kids alone know !
it is on the seashores the languages wither in the blossoms of universal dance!
----s.chandra kalaadhar

--

Thursday, October 13, 2011

SITTING BEFORE AN INFANT

ஒரு பச்சைக் குழந்தையின் முன்
&
நாட்களின் விரைவு நடையில் மாதங்கள் இரண்டு சட்டென ஓடிவிட்டன ;
இரு மடங்கு விரைவாய்க் குழந்தையின் அழகும் வசீகரமும் போட்டிநடை காட்டி இருக்கின்றன ;
கொழுத்த கன்னங்களின் குழிவும் ,சொப்பு வாய் நெகிழ்த்தும் பொக்கைச் சிரிப்பும்
கீழ இமைக்குள் சற்று மூழ்கும் விழி நிறைக்கும் இரு கறு வண்டினமும்
அவற்றின் நக்ஷத்திர ஒளித் தெறிப்புகளும்
இரு சிட்டுக் கால்களையும் ஓர் நேர்த்தியான விரைவில் தன்னுள் இழுத்து
மின்னல் விரைவில் மறுநொடியே வெளி உதைப்பதுவும்
பக்கம் சாய்ந்து ஆழ் தூக்கத்தில் அமிழும் அமைதியும் ..
ஓ ..வார்த்தைகளே ! எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள் ?
எப்படி இந்த அழகை நான் எடுத்துரைப்பேன் ?
தன் கனவு ஒன்றின் மையத்தில் அரைக்கால் சிரிப்பினை உதட்டினில் சுண்டி
மறுநொடி பட்டு இமைகளில் ஒரு இறுக்கம் காட்டி
ஓசையிலா ஓர் அழுகைத் துண்டை விசிறி
மனம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தாய் அமுதம் விரும்பி
உதடுகளைக் கூட்டி வைத்து உண்மையேபோல் உறிஞ்சி நிறைவதும்
ஒவ்வொரு நொடியும் இறைவன் மட்டுமே அறியக்கூடும் நுண்ணிய வளர்ச்சி பெறுவதும் --
ஓ சுற்றி உள்ளோர் இதயங்களை எல்லாம் மலர வைக்கும் சிறு தேவதையாய்
சில முரட்டுப் பெண் மனங்களிலும்கூடத் தாய்மை உணர்வைப் புரள வைக்கும் அற்புதமாய் ..
&
' மொழியே ! நான் திணறுகிறேன் ; நீ எங்கே? '
'மகனே ! வார்த்தை வேண்டி இக் குழந்தை முன்னேயே நான் தவம் கிடக்கிறேன் ,தெரியலையா !
&
-----சந்திர கலாதர்

i suffer from a disease

எனக்கோர் நோய்
&
இளம் பிராயத்தில் இருந்தே நான் ஒரு நோயால் அவதிப் பட்டு வருகிறேன் ..
அதை இனம் கண்டு சொல்ல எனக்கு அன்று சொற்கள் இல்லை ..
பூத்துக் குலுங்கும் ஒரு மலர்ச் செடியை நெருங்குவேன் ..
ஆனால் பூக்களைப் பறிக்கவோ அல்லது செடியை/மரத்தை உலுக்கி
மலர்களை வீழ்த்திச் சேர்க்கப் பிடிக்காது .
அப்படியே அசைத்தாலும் பாராட்டு மென்மைத் தட்டுதலாகவே அது அமையும்.
மரத்திற்கு வலிக்குமே என்று மனம் புண்படும் .
மயிலிறகுத் தடவலாய் பூக்களை வருடி முத்தம் கொடுப்பேன் ..
சிறிது பேசுவேன் ..கையசைத்து விடை கொள்வேன் ..
தங்கரளி,பன்னீர்ப்பூ ,பவழ மல்லி இவைகள் எல்லாம் எனக்கு மிகப் பிடிக்கும் .
ஏன்? அவைகள் எனக்காகவே தானாக உதிர்ந்து கோலமிட்டு இருப்பதாக
மிக உண்மையாக எண்ணி குவித்து அள்ளாமல் வலிக்காமல் ஒவ்வொன்றாய்க் காம்பு பிடித்துச்சேர்ப்பேன் ..
எல்லா மலர்களையும் ஆராய்வேன் ..
எத்தனை புற ,அக இதழ்கள் ,மகரந்த ஸ்தம்பங்கள் ,அதன் மையமாய் பெண் கொடி இழை ,வண்ணச் சிதறல்கள் ,பல மலரிடை ஒற்றுமை வேற்றுமைகள் எனக் கணிப்பேன் .
நேரம் போவதே தெரியாது ...
மலரை பறித்தால் அதற்கு வலிக்குமே என ஜகதீஷ் சந்திர போஸ் நிழலாடுவார்.
இலைகளை ,மரத்தை அணைத்துக் கொள்வதில் நான் பெரும் சுகமே அலாதியானது ..
இதனை ' இயற்கை நோய் ' என்று சொல்லலாமா ?
இந்த நோய் என்னில் என்றும் இருந்துவிட்டுப் போகட்டுமே !
--

Wednesday, September 14, 2011

THE MIND

மனம்
&
நினைவுகளைக் கைப்பிடித்து
அன்பாய் அழைத்து வரும் --
நடுவழியில் திக்கற்று
விட்டுவிட்டு ஓடிவிடும் --
நாளெல்லாம் தேடி ஓடி
நரை பூத்துவிடும் --
மறுபடி பரபரப்பில்
மறதிக்குள் போட்டுவிடும் !
ஏடு எழுதுகோல் ஏந்தியபடி
நாளெல்லாம் நலிகின்றேனே !
&
----சந்திர கலாதர்

Tuesday, September 13, 2011

THE EXHAUSTED OX

களைத்த மாடு ...!
&
முன்னொரு காலத்தில் என் இளமையில்
உடற்பயிற்சிகள் தொடர் பல நிமிடங்கள்
இடையில் சில நொடிகளே இளைப்பாறல்-
இன்றோ சில நொடிதான் பயிற்சிகள்
பல நிமிட இடைவெளி களைப்பாறல்--
இடையில் கடந்ததோ நாற்பது ஆண்டுகள் !
இதயத்தில் ஏதோ 'புஸ்..புஸ் 'மொழிகள் -
காது கொடுத்தால்-
"களைத்த மாடு கனத்த வண்டியை
தள்ளாடி இழுக்குதப்பா ..!
வழி வியர்த்துப் போகுதப்பா!
வாயில் நுரை தள்ளுதப்பா !"
----சந்திர கலாதர்

Monday, September 12, 2011

will silences not speak ?

WILL SILENCES NOT SPEAK..?
&
will silences not speak?--
if they have spoken..
why then these queries,
"why is he not speaking?"-
when even his own voice
has become alien to himself
seriously doubts he his own utterances-
have we not seen the dust
settling slowly,steadily and uniformly
on glittering surfaces-
likewise silly thoughts on his heart--
in the prolonged hours of wintry nights
are we not familiar with dew pearls
sitting prettily holding hands snugly
on the palms of the leaves ?
likewise are not my dumb words ?
but when and which sun would translate
my voiceless words into audible realities ?
----s.chandra kalaadhar

Friday, September 9, 2011

birthday greetings to a noble brother turning 75.

birthday greetings to a noble brother turning 75...
&
when we were school boys
we were thrilled through and through
on hearing your brief home-coming visits
from madhurai city to uthamapaalayam village--
you were our cheers
with your bundle of small gifts
aptly selected to match our expectant hearts--
yes,you alone knew our thirsts and dreams-
the days that followed would always reverberate
with our boisterous laughter bumping on walls and ceiling
and the involuntary claps in ecstasy
as you cracked wits at our expense with a special knack-
your wits were tangential
knocking our caps but never our heads-
like the teasing slaps of a friendly breeze-
you would remain as if nothing had happened
never a line of smile snaking on your lips
while we laughed like intermittent patter of rain-
o..what a charm did you possess
of which i was ever jealous and equally proud-
and a beautiful drawing hand-
a delight of my formative years-
two silent and eager eyes followed your brush
and intently digested the intricacies of painting delicacies--
you were a darling to one and all
and at times i wondered in no small measure
"has age forgotten its abrasive rubs on you
losing itself to your timely wits ?"
many girls would have fallen in love
for your earthly charm and pleasing manners
had you just nodded your head for wedding--
still a mystery why you opted instead for bachelorhood-
why this voluntary shackle on your beauty?
'beauty should beget beauty
should never waste it to wither away'
shakespeare observed in his sonnet-
why on earth put you out the light of beauty
from the face of the earth ?
and happiness from the heart of a mother?
you might have boldly weathered
the onslaughts of youth valiantly
that even saints are vulnerable to their tremors--
yes,for a noble cause for the family.
we salute you in solemn silence-
you had a golden voice
and your rendering of 'maadhavip ponmayilaal'
of singer t.m.s . in exact replica
transported me to bliss and joy.
you relinquished your promotions to be with parents-
a pillar of strength ,really and truly ,to our parents
till they breathed their last in a seven year gap
at their very ripe age as our guiding spirits--
in fact the whole house was ever in chant of your name
'subramani ! subramani !' from every corner-
you steadfastly performed all household tasks
even amidst your tired sighs of 'ammaa..appaa'-
not a trace of murmur or unwillingness ruled your face-
you cared everybody but ignored your health
and invited the disaster of stomach disorder
that keeps you ever in its clutches-
when our bellies have their rises and falls seasonally
your wolf's belly hugging your back is ever a wonder-
you denied yourself the honour of social functions
of even your siblings to be with aged parents-
it is only in films have i seen heroes performing
service totally dedicated to their parents-
but you are such a real person in my life
performing every and all duties
to our fragile-boned but stout-hearted mother-
you had been the pivot of her life and vice-versa;
the frequent emotion-soaked calls of 'yae supramani !'
of our father and mother had to be experienced
only in person ,but might lose charm in narration -
you would have no more births
as you have served your gods of this life-
yes, you are a mother theresa in our midst !
today you are past 74 and into 75
but when i am told that you look 90 i feel sorry
that age had taken revenge now with double vigour
or else you must have lost the ever-playful child in you
but befriended the foamy-haired ,wrinkle-stamped worry in place--
we ,your siblings, are very proud of you
and i feel blessed to be born as your younger brother
though i may not be worthy of such a grace-
i still remember your inconsolable crying, like a child
when our mother left for heavenly abode
when our 'annaa' commented
"let him weep;he needs to melt down his grief
of mountainous proportions in endless streams;
let it thin out and unburden his heart
and none needs to comfort or disturb him"-
may our great and loving parents shower their blessings
on their dear son today for a painless life!
i seek your blessings at your feet
at this memorable moment of your fruitful life !
-----chandra kalaadhar

Wednesday, September 7, 2011

FAILING AND SPROUTING RELATIONS..

உதிரும் உறவுகள் ! நட்புகள் !
&
இந்த உறவுகள் இந்த நட்புகள்
ஓ ..எத்தனை வினோதங்கள் !
ஒன்றொன்றாய் உதிர்வதும்
ஒன்றொன்றாய் தளிர்த்தலும் -
கழுத்திலே அரைவைக்கல் என
எண்ணி விலகியது எல்லாம்
எப்படியோ கட்டி உறவாடுவதும் --
காலம் எல்லாம் கட்டியம் எனத்
தேர்ந்து ஒட்டியது எல்லாம்
பனிக்கட்டியாய் உருகி மறைவதும் --
இதற்கும் காரணம் புரியாது
அதற்கும் நோக்கம் அறியாது ---
ஒரு பார்வையின் கோணல்
ஒரு சொல்லின் முட்கள்
ஒரு செயலின் சிறு அந்நியம்
ஒரு புரிதலின் இடறல்--
உதிர்தலின் உரமாய்
எதுவோ ஒன்று இருக்கலாகுமோ ?
ஒரு பார்வையின் பரவசம்
ஒரு சொல்லின் கனிவு
ஒரு செயலின் அண்மை
ஒரு புரிதலின் நேர்மை --
தளிர்த்தலின் தாயாய்
எதுவோ ஒன்று இருக்கலாகுமோ ?
கல்லூரி வாழ்வின் கடைசி நாட்களில்
கண்ணீர் மல்க அலைந்து திரிந்து
ஒரு குறு ஏட்டில் பெற்ற வாசகங்கள்
பிரித்துப் படிக்கையில் இடித்துச் சொன்னது--
"நொடிகளின் சத்தியம் மடிவது இயல்பே !
தன்னை மலர்த்திய உறவுகள் எல்லாம்
தன்னில் மலர்ந்த உறவில் அழியும் ! "--
வாழ்க்கை உணர்த்திய பாடம் இதுவே!
-----சந்திர கலாதர்

Monday, August 29, 2011

JUMPING INTO THE WORD NEST OF OTHERS !

பிறர் சொற்கூட்டுள் புகுந்து ....!
&
பிறர் சொற்கூட்டுள் புகுந்து
அவர் லஹரி[அலைகள்] மிதந்து
எனைக் கடந்து இறைவா !
உனை அடையும் ஆசை எனக்கில்லை --
என் படகு எளிமைதான் -
என் வார்த்தை கொச்சைதான்
என் வியர்வையில் நனைந்ததே-
என் பாடல் என் நெய்தலே !
என் படகில் நீ ஏறி வா -
உன் பாதி பெண்மையே
என் பாதி ஆண்மையே !
என் இல்லம் தாழ் குடிசைதனில்
நான் காதல் செய்வேன்--
உனை கடந்து என் உள் நடக்க
நீ விரும்பி வா !
-------சந்திர கலாதர் -----

O THAT SINGLE LINE FROM A BOOK I READ ..!

ஏதோ ஓர் வரி ஏதோ புத்தகத்தில் ...!
&
ஏதோ ஓர் வரி ஏதோ ஓர் புத்தகத்தில் இன்று--
எங்கோ அருவமாய் என் மனவிழிகளில் பழகு உருவமாய்
எனதருமைப் பெற்றோரை
என் தியானச் சிந்தை நேர் உயரே உயிர்ப்பித்தது ---
கற்றை கற்றையாய் நினைவுகள் வெண் தழலாய்
செங்கொழுந்தாய் என்னுள் எழுந்து என்னைத் தகித்து
என் கெட்டவை எல்லாம் பட்டு அழிய வெண் திருநீறாய்
நல்லவையாய் நான் கைப்பிடியாய்த் தூர்ந்துவிட--
அடர் அருவியென அவர் அங்கைத்தலம் ஜனித்த
அருட் பிரவாகங்கள் என்னுள் இங்கிதமாய் இறங்க
மின்னல் விரல்களாய் சக்தியின் துள்ளோட்டம்
அக்கைப்பிடி அணுவுக்குள் அணுவென விரைய
ஒளிமயமாய் ஓர் உருவாய் என்னில் நான் ஜனித்தேன்-
இன்று நிகழ்ந்தது இது சத்தியம் .
-----சந்திர கலாதர்

Friday, August 26, 2011

i am the last flower of this flowering season ..

i am the last flower of this flowering season!
&
I am the last flower of this flowering season
and my tree and the season looks jaded and tired--
there is none to take leave of
nor anyone to see me off
when the softest wind would gently snap my ties
with the slender stalk that dreamily holds me aloft
and send me in swirling descent
for a final kiss of the earth
at the end of my daydreams in light and air--
the nature's harsh laws have no mercy
once the youth and beauty evaporate in hours
between sunrise and set ,unlocking frial bonds--
the tree, my bearer, seems to have no tears for me;
seems to treat all in philosophical silence--
let me fill the air and space with fragrance and colours
in the fleeting moments of my brief journey
before my hour is done!
&
-------------s.chandra kalaadhar

Saturday, August 20, 2011

THE WAY OF THE WORLD

உலகியல் சொல்வேன் !
[THE WAY OF THE WORLD ]
&
டும்..டும்..டும்டும்டும்டும் ....!
இதனால் சகல ஜனங்களுக்கும் பறை அறைந்து
அறிவிப்பது என்னவென்றால் .....!
&
இதோ அறிவீர்--
இனிய வார்த்தைகளால் என் உதடுகள்
அழகுற உமைப் புகழ்ந்து பூக்கையில்
இதயத்தின் ஆழ்ந்த இருட்டு இடுக்குகளில்
அவற்றின் வேர்கள்
அழுகிய சேற்றில் நாறும் அவலங்களில்
உமைப் புரட்டி எடுக்கின்றன
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
ஏதோ ஒன்றை எதிர்த்து
கூரிய தர்க்கக் கணைகளைக்
கருணையின்றிப் பொழிகையில்
அதனையே என் நெஞ்சுள்
மலர் சொரிந்து பாதம் பணிந்து
அனைத்து மரியாதைகளுடன் வரவேற்கிறேன்
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
என் நாவும் இதயமும்
எந்நேரமும் எதிரும் புதிருமாய் --
எனவேதான் சொல்கிறேன் -
ஓயாது வித்தை காட்டும் என் நாவினைச் சாதுர்யமாய்க் கடந்து
உன் செவிக்கலத்தை என் இதயத்துள் இட்டுச் செல் -
அதன் புதிரான மொழிகளைக் கேள் .
&
பெண்பற்றி மிக இழிவாய்
நான் உரக்கப் பறை கொட்டுகையில்
என் திருட்டுப் பார்வைகள் காமத் தகிப்பில்
ஓய்வின்றிப் பெண் நிழலைத் தேடித் தவிக்கின்றது -
&
மனம் நெகிழும் மொழிகளில்
பெண் இழிபடுதலை முடித்திட
உலகிற்கு முனைந்து போதிக்கையில்--
அதுவே என் கனல் கண்களுக்கு
ஆர்ப்பாட்டமான அறுசுவை விருந்து
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
இரு துருவங்கள் என் இதயமும் நாவும் --
எனவே என்னுள் மூழ்கிப்
புதைத்த எண்ணங்களைத்
தோண்டிப் பறித்துக் கொள்வீர் -
&
வாழ்விற்கு முற்றுப் புள்ளி வைக்க
உறுதியாய்த் திட்டமிடுகையில்-
வாழ்வின் நைந்த ஆசை வேர்ப் பிசிறுகள்
ஏமாற்ற மலட்டு முகடுகளிலும்
ஈர நம்பிக்கை இழைகளைக் கண்டு மாறிவிடுகிறது
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
என் சிரிப்பின் வெடி முழக்கங்கள்
திக்கெங்கும் வானில்
ஆர்ப்பரித்துப் புரளுகையில் -
என் விம்மல் பேரலைகள் உள்ளிருந்து
இதயக் கரைகளில் முட்டி மோதி
நெஞ்சில் அறைந்து கொள்கின்றன
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
என் முகமேடை தோன்றும் உணர்ச்சி நாடகங்களை
உலகீர் ..நம்பாதீர் !
புதைத்த இதயத்தின் ஒளித்த மொழிகளுக்கு
உமது செவியை ஓட்டிச் செல்வீர் !
பறை சாற்றி விட்டேன் ;
பின் எனைக் குறை காணாதீர் !
டும்..டும்.டும்டும் ..டும்டும் !
&
சந்திர கலாதர்

Thursday, August 18, 2011

IS THIS THE POISON HE PLANTED IN ME ?

அவன் வைத்த நஞ்சா ?
&
அவன் தகாதன சொன்னான் -
மௌனமாய்க் கேட்டு இருந்தேன் ;
பின் -
என்னுள் எட்டிப் பார்த்தேன் ..
ஆ..ஆழத்தில்....
வெகு வெகு ஆழத்தில்
ஓர் சிறு உருவம் --
சிறு முளை விட்டதுபோல்
கூனி அமர்ந்திருந்தது -
பார்க்கையிலேயே அது வளர்ந்தது ..
விரைவாய் ..பெரிதாய் ..
விண்கல வேகமாய் -
ஒ !
அவன் வைத்த நஞ்சா ?
இத்தனை பெரிதாய்.கனமாய்
என் தலை மீது அழுத்துகிறது--
அறிவைத் தீய்க்கிறது !
&
சந்திர கலாதர்

FOR WHAT ELSE MY LONGING ?

வேறு எதற்கு என் ஏக்கம் ?
&
சூரியனிடம் ஓர் தயக்கம்
ஒளியிடம் ஒரு சோகம்
காலையிடம் ஒரு தூக்கம்
வானிடம் ஓர் சோம்பல் --
ஆனால்...
குளிர் காற்றிடம் மட்டும்
ஒரு சுறுசுறுப்பு -
திறந்த விண்வெளி -
தொலைவான தொடுவானம் ;
சிதறிய பனை மரங்கள் --
சிறு குடிசைகளின் பேரமைதி
எல்லையில்லாப் பெரு வானம்--
மேனி சிலிர்க்குதடி !
வேறு எதற்கு என் ஏக்கம் ?
&
சந்திர கலாதர்

WHICH COULD DEFY THE TIME'S ONSLAUGHT ?

காலம் கடக்கும் ஆக்கங்கள்
&
எத்தனை படைப்புகள் !
எத்தனை நூல்கள் !
காலத்தின் முதுகில்
ஓயாத விதைப்புகள்--
எவை எவை வானுள் நிமிர்ந்து
சந்ததிகளைச் சந்திக்கும் !
எவை எவை மிதிபடும் ?
வியப்பான அச்சங்கள் !
அனைத்துமே அன்றன்றைய
அற்ப ஈசல்களா ?
காலத்தின் காலோடு
சலியாது நடைபோடும்
வலிய பாதங்களை
எது நிர்ணயிப்பது ?
&
சந்திர கலாதர்

O THE NIGHT WATCHMAN !

ஒ ..இரவுக் கூர்க்காவே..!
&
நிலவே !
உன்னைப் புதிய பார்வை
பார்க்கப் போகிறேன் --
&
எத்தனை குழந்தைகட்கு
யுகம் யுகமாய் நீ
பாற் சோறு ஊட்டி இருப்பாய் !
&
எத்தனை குழந்தைகள்
பிஞ்சுக் கரங்களால்
உன்னைப் பறிக்க வானுள்
விரல் விரித்து இருப்பர்--
&
எத்தனை தாய்மார்கள்
தங்கள் மழலைகளின் முகங்களில்
உன்னைக் கற்பனைத்து இருப்பர் --
&
எத்தனை நங்கையரின்
நெஞ்ச மஞ்சங்களில்
நீ சிறைப்பட்டு இருப்பாய் !
&
எத்தனை கவிஞர்களின்
பித்தான முத்தங்கள்
உன்னை ஈரப்படுத்தி இருக்கும்--
&
எத்தனை விரக தாபப் பார்வைகள்
பிரிவு நேரங்களின்
எட்டாத் தொலைவுகளில் இருந்து
உன்னில் ஒரே நொடியில்
புகுந்து சங்கமித்திருக்கும் --
&
காதலர்களின் பிரிவுத் துயரங்கள்
உன்னைத் தேய்த்து விடுகின்றனவோ ?
அவர் கூடல் நிறைவுகள்
உன் பூரிப்பின் நிலைக்களனோ ?
ஓ ! இரவுக் கூர்க்காவே ..!
&
---சந்திர கலாதர்
[29.07.1987,காலை 09.45]

Tuesday, August 16, 2011

ARE NATURE POEMS INFERIOR ?

மனித நேயப் போர்வைகள்
&
" சமுதாய விழியற்ற
மனித உருக்கமற்ற
எழுத்துக்களும் கவிதைகளா ? "--
இப்படிக் கொக்கரித்தல்
இன்றைய வா[வே]டிக்கை !
&
இரண்டு கவிதைகளில்
கண்ணீர் பாய்ச்சிவிட்டால்
கனல் கக்கி விட்டால்
' மானுடக் காவலன் ' எனத் தானே
மகுடம் சூட்டிக் கொள்ளும்
'வேடம் 'தாங்கல்களின்
வெற்றுப் பிதற்றல் இது !
&
சிரிப்புத்தான் வருகிறது --
இவர்கள் எழுத்துக்கள்
எத்தனை சத்தியம் ?
&
ஏ !சொல் வீரர்களே !
உங்கள் மலட்டுச் செடிகளில்
செயல் மொட்டுக்கள்
என்றேனும் முகிழ்த்ததுண்டா ?
&
ஓ ! உபதேசிகளே !
வார்த்தை வணிகர்களே !
' சமுதாயச் சிற்பி ' பட்டங்கள்தானே
தாளாத தாகங்கள் ?
&
கவிதைத் தூரிகையால்
விதவையின் நெற்றியில்
'திலக' நிலவு தீட்டிட
வற்றாத ஆசை பலர்க்கு !
எழுத்து உலர்வதற்குள்
' புரட்சி மாவீரன் 'எனத் தாமே
பூரித்துப் போகும் புரட்டர்கள் !
பேனாதானே --
உள்ளிருப்பதும் இதயப் பொய்'மை'தானே !
&
ஒன்று கேட்பேன் --
ஊர் அறிய சட்டம் சாட்சி நிற்க
விதவைக்கு நெற்றித் திலகமிட
நெஞ்சில் உமக்கு வலிவுண்டோ?
அன்றி உம் மைந்தற்கு
விதவைகளை மணம் முடிக்க
இதயத் தூய்மைதான் உண்டா ?
&
இது நிகழின் இவர் பெயரைப்
பொன் வரிகளில் வடிப்பேன் --
அன்றி கவிதைக் கனலாலே
சுட்டுப் பொசுக்குவேன் !
&
ஜாதி இல்லை எனத் தான் எழுதியதுமே
பாரதி எனும் கனவில் முண்டாசு தேடி
உரத்துக் கத்தும் வறட்டுத் தவளைகாள்--
பாரதி வாழ்ந்தபின்தான் சொல்லானான் !
அவன் வாழ்க்கைச் சரிதம்
அகல நடந்தால் தனியே
அவன் ஆழ உழுத வழி
விழிமுன் விரிந்து
அவன் மீசைக்குப் பொருள் சொல்லும் !
&
சேரி தாழ்த்தப்பட்டோர் எனப்
பொய்ப்புயல்கள் உருட்டுவோரே !
ஓட்டை குடிசையின்
ஏழை மங்கை ஒருத்திக்கு
விளம்பர ஊளைகள் இன்றி
சட்டம் கோலோச்ச
உண்மை மணவாழ்வு
எவர் உம்மில் தருவார் ?
&
வரதட்சணைக் கொடுமையை
வகை வகையாய் எழுதி அழுவோரே --
நெஞ்சில் கை வைப்பீர் --
மின்னும் பொன் இன்றி
வரிசைகள் வாராது
நங்கை நல்லாளை
இல்லம் வந்திடுக எனச்
செயலிற் சிறந்தவர் உம்மில் யார் ?
&
ஒன்றா ? இரண்டா ?
இவர் பாடும் மனித நேயங்கள் !
போர்த்திடும் போர்வைகள் -
சுழற்றும் அட்டைக் கத்திகள் !
வார்த்தை தாசர்களே !
சொற் பந்து தீரரே !
செயற் போட்டியில்
என்று முன் நிற்பீர் ?
&
செயலற்ற வீணரின்
வார்த்தை நரிகளை
என் கர்ஜனை கொன்றுவிடும் --
கயமைக் குருதி குடித்து
கோபம் தணித்திட என் கவிதை
புலியெனப் பாய்ந்து வரும் !
&
தகுதிகள் இன்றிப் பாடுவோர் தம்மால்
இத்தாரணி தாழ்ந்ததம்மா !
மானுடம் மடிந்ததம்மா --
இந்த மண்ணிடைக் காளான்கள்
மக்கி மடிந்திட எரிதழல் சூரியன் ஆகிடுவோம் !
&
சம தர்மங்களில் சொத்துக் குவிப்போனும்
ஒளி வெள்ளத்தில் ஊறித்
' தொண்டை ' வஞ்சிப்பானும்
நாளிதழ் நடுவே பொய்முகம் தாங்கிப்
போதனை செய்வோனும்
ஆன்மத் தூய்மை இற்று
'பிண' எழுத்துக் கோர்ப்பானும்
அறவே ஒழிந்தாலே
'மானுடம் 'மலர்ந்துவிடும்!
&
நோய்க் கொசுக்கள் பொங்கிடப் பறந்திடும்
நாற்றப் பன்றியும் இம்மன ஊனரைக் காட்டிலும்
வெகு மேன்மை என்று உரைப்பேன்
&
முதலில் மௌனச் செயலாவீர் --
செயல் நடக்கும் போதினில்
வார்த்தைப் 'பாடை'களின்
ஊர்வலங்கள் தேவை இல்லை --
உண்மையின் பாதம் பூமியில் படுகையில்
எம்மொழிக்குமே அங்கு வேலையில்லை !
&
கவிதை என்பது
ஓர் வழிப் பாதை அல்லவே --
மானுடத்தோடு விண்ணையும் மண்ணையும்
இயற்கையின் படைப்பு அனைத்தையும்
அள்ளி அணைத்துத் துள்ளிப் பாடி
வண்ணப் பொழிவில் நீந்தித் திளைத்து
அற்பம் என்று எதனையும் கருதாது
ஒவ்வொன்றின் உன்னதம் உரக்கக் கூறி
உணர்வில் பறப்பது கவிதைச் சிறகு --
ஒளியைப் பிளந்தாலோ ஏழு நிறங்கள் ;
உலகைப் பார்த்தாலோ எண்ணிலாச் சுவைகள் --
வகை வகை அற்ற பாதைகள் இன்றேல்
ஓர் நிறம் கொண்ட மொட்டை வெளியாய்
வாழ்வே சோர்வாய் முடங்கிடும் அன்றோ?
கவிதை எனும் ' காமிரா ' கொண்டு
இயற்கையை எங்கும் என் காதலில் நாடி
சுவைத் தேனாய் படைத்திடுவேன் !
&
------சந்திர கலாதர்

Sunday, August 14, 2011

what else i would ask for this morning ?

வேறென்ன வேண்டும்  இக்காலையில் ?
&
நெற்றிப் பொட்டாய் முருங்கை இலைகள் --
குளிர் காற்றைக் கொஞ்சம் தன் நெருப்பில் வாட்டி
இன்ப ஓட்டம் தரும் சூரியன் --
இலை மார்பகங்களில் குறும்புத் தாவல் தாவி
விளையாடிச் செல்லும் குளிர் காற்று --
தரையில் , சுவரில் எதையும் விடாது நுணுக்கமாய்
நிழல் ஓவியம் தீட்டும் ஆதவன் --
வேறென்ன வேண்டும் இக் காலையில் ?
&
---சந்திர கலாதர்

FEED THE TREES WITH YOUR NECTAR

கிணறே ! அமுதம் தா !
&
கிணற்றிலிருந்து வாளிவாளியாக ,நூற்றுக்கும் மிகையாக இறைக்கும்பொழுது கிணறு என்னிடம் கெஞ்சுவதுபோல் உணர்கிறேன் .
ஆனால் கிணறே ! எனக்காக இறைக்கவில்லை ; இதோ வீட்டைச் சுற்றி வளர்ந்து தாகமாய் ,பசியாய் ஏழு நாட்கள் காத்திருந்து ஞாயிறு
என் வரவு பார்த்து ஏங்குகின்றனவே இந்த மரக் குழந்தைகளுக்குத்தான் ! எனவே தாய்ப் பாலாய் நெஞ்சார வழங்கிடு அமுத சுரபியே !
------சந்திர கலாதர்

--

MY CORRECT ADDRESS

என் சரியான முகவரி
&
வானத்தில் வாழ்பவன் நான் -
மேக மெத்தைகளில் புரள்பவன்
வண்ணக் கற்பனை விரிபவன்
புல்லின் கீதங்கள் புரிந்தவன்
பளிங்கு நீரோடைச் சிரிப்பினன் -
தென்றலுக்குத் தெரியும்
என் சரியான முகவரி !
&
சந்திர கலாதர்

ANALYSE MYSELF.

என்னை அலசுகிறேன்
&
தொலைந்து போன இளமையைவிட
தொலைத்துவிட்ட வாழ்க்கையைவிட
தொலைந்துபோன எண்ணங்களுக்காகவே
கண்ணீர் பெருக்கிக் கதறி அழுகிறேன்
முட்டி மோதி மூலைகளில் தேடுகிறேன்
&
சந்திர கலாதர்

Monday, August 8, 2011

A Boat In The Sky

வானத்திலே படகு
[குழந்தைப் பாடல் ]
&
வானத்திலே படகு
வட்டநிலாப் படகு
வெள்ளைநிறப் படகு
பால் பொங்கும் படகு !
&
யாரும் இல்லாப் படகு
கொள்ளை அழகுப் படகு
பாம்பு பேய்க்கு எல்லாம்
பயப்படாத படகு !
&
மேக அலைகள் புகுந்து
கிழித்து வரும் படகு
கோடி மீன்கள் பார்க்கப்
பவனி வரும் படகு !
&
காலை கப்பல்போலச்
சுட்டுப் பொசுக்காமல்
குளிரை அள்ளித் தூவிக்
கொஞ்சி வரும் படகு !
&
--சந்திர கலாதர்

Saturday, August 6, 2011

LORD ! SHOW ME THE WAY !

வழி விளக்கம் அருள்வாய் .
&
நள்ளிரவின் கறுமை-
திசை புரியா வான்வெளி -
சரஞ்சரமாய் காற்றில் நீந்தும்
சுற்றுலாப் பறவைகள் ஓர் நோக்காய் --
எங்கேயோ நீ அமர்ந்திருக்கிறாய்
கலங்கரை விளக்கமாய்-
கச்சிதமாய் வழி காட்டுகிறாய் --
&
சஞ்சலங்களால் குருடாகி
தன்னந் தனியாகி எங்கெங்கோ
பொழுதெல்லாம் அலைகிறேன் --
என் பாழும் மனதிற்கு
கண்மலர் ஒளி விரித்து
வழி விளக்கங்கள் அருளினால் என் ?
&
-- சந்திர கலாதர்

on a black steam train of olden days

குக்கூ குக்கூ ரயில் ....
&
[பழங்காலத்து கறுப்பு எஞ்சின் ரயில் ]
&
' குக்கூ குக்கூ ' ரயில்
புகையைக் கக்கும் ரயில் !
' ஜிகுஜிகு ' ' ஜிகுஜிகு ' ரயில்
சீறிவரும் ரயில் --
' கடக் கடக் ' ரயில்
ஆயிரம் சக்கர ரயில் --
தண்டவாளம் இரண்டில்
' கடக் சடக் ' ரயில் --
ஆற்றுப் பாலம் மேலே
' லொடக் கொடக் ' ரயில்--
பாதை மாறும்போது
' கீச்சுக் கீச்சு ' ரயில் --
யானைபோல எஞ்சின்
சூரியன் போலக் கண்ணு -
' புஸ்ஸு புஸ்ஸு ' மூச்சு
' கிச்சு கிச்சு ' எச்சில் --
அரக்கன்போலப் பசி
ஊட்ட ஊட்டத் தின்னும்--
பேயைப்போலத் தாகம்
ஊத்த ஊத்தக் குடிக்கும் --
பாம்புபோல உடம்பு
வயிறு முழுக்கத் தீனி -
நெளிந்து வளைந்து ஓட்டம்
இப்படி அப்படி ஆட்டம் -
பச்சை நிறம் பார்த்தால்
பாய்ந்து செல்லும் ரயில் -
சிவப்பு நிறம் பார்த்தால்
பயந்து நிற்கும் ரயில் -
ஊர் ஊராய் ஊர்ந்து
உள்ளங்களைச் சேர்க்கும் -
மழை வெயில் பாராது
இராப் பகலா ஓடும் !
&
---சந்திர கலாதர்

Saturday, July 16, 2011

a tale of sorrow

ஒரு துன்ப கீதம் ..
[ பகுதி-- 2 ]
இதோ ! தாய்ச் சிட்டு மின்னல் அருகில் உள்ள மரக்கிளையில் இறங்குகிறது --
மின்னலை இடி தொடரவேண்டும் அன்றோ ?
அலகிடை உணவுடன் தன குஞ்சுகளை ஆர்வத்தோடு அழைக்கின்றது--
பதில் இல்லை --என்ன வேடிக்கையாய் உள்ளதே -
பறந்து விட்டனவோ ...? சிறகுகள்தான் முளைக்கவே இல்லையே ..!
வேடிக்கை காட்டுகின்றனவோ .!மறுபடி தாய் செல்லமாகக் கொஞ்சி அழைக்கிறது -
' கீ....கீ..கீ ! '
............!
என்ன..!
நிலவும் மயான அமைதி ஆயிரம் குரல் கொண்டு பேசுகின்றது !
ஏதோ தீங்கு ஏற்பட்டிருக்க வேண்டும்--
நம்பிக்கை சற்று இழந்த கலவரத்தில் ..' கீ..கீ..கீ..கீகீகீ ! '
' .......! '
மனம் பதை பதைக்கின்றது--
உடன் தன் கூடிருந்த கிளைக்குத் தாவி மறுபடி கூவுகின்றது -
பதிலே இல்லை ....எங்கிருந்து தாயே வரும் ?
சிறகுகளில் கவலை முளைக்கின்றது -
கூடு இருந்த இடத்திற்கு நேராக வருகின்றது -
ஒன்றும் இல்லை ...கூட்டியே காணோம் !
"என் கூடு எங்கே ? என் அருமைச் செல்வங்கள் எங்கே ?
எவர் கவர்ந்தார் என் பிஞ்சுக் குழந்தைகளை ? "-என்று
தாய் கதறுகின்றது ..வீழ்கின்றது ...உருளுகின்றது -
இங்கு பறக்கின்றது ...அங்கு ஓடுகின்றது ..கிறீச்சிடுகின்றது....புலம்புகின்றது -
கத்தித் துடிக்கின்றது -
'கீ.கீ..கீ ..கீகீகீகீ ! '--என்று குரல் கொடுத்துக் கூர் செவியாய்ப் பதிலுக்கு ஏங்குகின்றது --
அமைதி...அமைதி...அமைதி !
தாய் நெஞ்சிலோ துயரம் ,கலவரம்,சோகம் ,துக்கம்-
மற்றக் கிளைகளைச் சுற்றி வருகிறது ..
உயர்ந்த கிளைகள் ,தாழ்ந்த கிளைகள் ...இந்தக் கிளைகள்,அந்தக் கிளைகள் -
மூலை முடுக்குகள் ..எல்லாவற்றிலும் சுற்றியலைந்து
குரல் கொடுத்தபடியே தேடுகின்றது -
சிறகுகள் துன்பத்தில் துடிதுடித்துப் படபடக்கின்றன -
தடையின்றிச் சோக கீதம் பீறிட்டுப் பொங்கி வெளி ஏகுகின்றது--
ஓலைக் கோடரி இதயத்தைப் பிளக்கின்றது --
இரைகொண்ட அலகுடன் தந்தைச் சிட்டும் இப்பொழுது வந்து இறங்குகின்றது -
ஒருபுறம் வியப்பு ....மறுபுறம் துயரம் இரண்டிலுமே மாறி மாறி விழுந்து தவிக்கின்றது -
இரு சிட்டுகளும் அரற்றியபடியே சோலை எங்கணும் சல்லடை போட்டுத் தேடுகின்றன -
தன் கூடு இருந்த கிளையைத் தாய்ச்சிட்டு அயர்வே இல்லாமல் சுற்றிச் சுற்றி --
நம்பிக்கை இழப்பதுவும் பெறுவதுவும் வட்டமிடுகின்றது -
எவரால் மடை இறக்கமுடியும் அத்தாய் அன்பிற்கு ?
தன் குழந்தைகள் அங்கில்லை என்பது நன்கு தெரிந்த பின்னும்கூட --
ஓர் அற்ப ....மிகமிக அற்ப ஆசையில் அக்கிளையைச் சுற்றிச் சுற்றி சுழல்கின்றது --
முடிவற்ற வட்டங்கள் ! ஒன்றில் ஒன்றாய்ச் சிக்கும் வட்டச் சுழல்கள் !
சிறகுகளில் ஜனிக்கும் ' விர்..ர் ' அம்புகள் இதயத்தைத் துளைக்கின்றன -
துயர வட்டங்களில் சோக ராகங்கள் தேம்பித் தேம்பி அழுகின்றன !
என் இதயமோ நாவின் விளிம்பில் தத்தளிக்கின்றது-
உதடுகளின் தொடு வானங்களில் சொற்கார்மேகங்கள் குவிகின்றன -
விழிக் கருமைகளில் ஆவல் மின்னல்கள் பளீரிடுகின்றன -
ஏக்கப் புயல்கள் நாசியிற் சீறுகின்றன -
நடந்தவற்றை எல்லாம் சொல்லித் தீர்த்திட மனம் துடிதுடிக்கின்றது-
வார்த்தைகள் உதடுகள் மீது நெருக்கமாக நர்த்தனம் புரிகின்றன -
சொற்கள் கொப்பளிக்கின்றன !
ஒ.....எனக்கு மட்டும் சிட்டுமொழி தெரிந்திருப்பின் ..!
அந்தோ,.! மானுடன் நான் எப்படிப் பகர்வேன் !
மொழி புரியாததால் ...என்னையே கொலைகாரன் எனக் கருதிவிடின் ..?
சரி..என்ன தேறுதல் சொல்வேன் ?
அந்திவேளை--
இவைகளின் துன்பத்தைப் பற்றி ஓர் சிறிதும் கவலை கொள்ளவில்லை -
தன் வாலில் இரவை இழுத்துக் கொண்டு மெல்ல வருகின்றது !
ஆனால்.....இவை தேடுவதோ முடிவு பெறவில்லை -
வந்தும் போயும் கதறியபடி அலைகின்றன -
இது எப்பொழுது முடியும் ?
துன்பம் தாளாத நான் குற்றவாளியைப் பின் ஏகுகிறேன்--
பார்த்த குற்றத்துக்காக நலிகிறேன்-
சோகத்தால் களைத்த ஏழை நெஞ்சங்களைத் தனியே தவிக்க விட்டுவிட்டு
சுமையான இதயம் தாங்கி வீடுநோக்கி நடை போடுகிறேன் --
கால மருத்துவனே ! விரைந்து நீ சோலை செல்--
ஆறாத காயத்திற்கு மென்மையாய் மறதி இடுவாய் !
---------சந்திர கலாதர்

a tale of sorrow

ஒரு துன்ப கீதம் ....
பரவசமாய்க் காற்றில்ஆடி மகிழும் ஓர் கொடுக்காப்புளி மரம் --
அதன் ஓர் கிளை நுனியில் ஊசலாடும் ஓர் சிறு கூடு ..
இரு குரூரமான விழிகள் கூட்டை நெருங்குகின்றன ;
இரக்கமில்லா அவற்றின் அரக்கப் பார்வை கூட்டின்மேற் குவிந்து உறைகின்றது -
பார்வை பறை சாற்றுகின்றது கொடும் எண்ணங்களை --
வஞ்சக விழிகள் விரிந்து கூட்டை நெருங்குகின்றன ;
கூட்டினுள் பார்வையை ஈட்டியாய்ச் செருகுகின்றன-
என்ன கொடுமை இது !
தாய்தந்தைப் பறவைகள் இல்லாதவேளையில் -
கள்ளமற்ற பிஞ்சு இதயங்கள் அச்சத்தில் அருவியாய் அரற்றுகின்றன --
தரையில் எறிந்த மீனாய் நான் துடிக்கின்றேன் -
கொடிய கருவிழிகள் இங்கும் அங்குமாய்ச் சுழல்கின்றன -
அப்பாடா...!
ஓர் நொடி ஊர்கிறது விழிகளின் புரியாத தயக்கத்தில்-
சே .! என்ன நொடி அது !
வஞ்சக விரல்கள் கூம்புகின்றன இடுக்கியாய்-
குஞ்சுகளை வெளியே இழுக்க முயல்கின்றன -
கொடிய உதடுகளோ தாய்ப்பறவையின் மொழி பேசுகின்றன -
பாவிக் கரங்கள் கூட்டினைத் தலைகீழாய்க் கவிழ்த்துக் காலி செய்ய முயல்கின்றன --
முயற்சி தோல்வியடைகிறது -
கரங்கள் பின்வாங்குகின்றன -
ஓர் பெருமூச்சு .." ஓ " !
இதுவரை என்னை அழுத்திக் கொண்டிருந்ததே..அது அடிவயிற்றினின்று விடுதலை பெறுகின்றது !
" கடவுளே ! உனக்கு நன்றி !..அல்ல.அல்ல -
என் நன்றியைத் திருப்பிக் கொடுத்துவிடு ! "-
அதே கரங்கள் மிகுந்த உறுதியுடன் மறுபடி கூட்டை நெருங்குகின்றனவே --
எளிய குஞ்சுகள் உடும்பெனக் கூட்டினுள் ஒட்டிக் கொள்கின்றன -
பரிதாபமாக ஓலமிட்டுக் கரைகின்றன ..கதறி அழுகின்றன !
அந்தோ! தங்கம் கவர்ந்திடத் தளிர்நடைக் குழந்தையின் கழுத்தையே முறிக்கும் மனத்தினன்முன்
வீறிடும் கதறல்கள் என்ன செய்யக் கூடும் ?
கொடிய கரங்கள் கூட்டினைப் பிசாசுபோல் உலுக்குகின்றன ..ஆட்டிக் கலைக்கின்றன -
எனினும் வெற்றி பெறவில்லை -
ஐயோ ..கூடு முழுவதும் கதறல் ஒலி...ஒப்பாரி...ஓலம் !
கதறல்கள் பொங்கும் வெள்ளமாகி எட்டுத் திக்கும் பாய்ந்தோடுகின்றது-
செவிகளில் அலை மோதுகின்றது -
எனினும் யாது செய்வேன் யான் ?
இந்தக் கரங்களின் உரிமையாளன் வலிவு கொண்டவன் -
அன்புச் சொற்களுக்குச் சொற்கதவம் சாத்திவிட்டவன் ;
கருணை கண்டிடாக் குருடன் ..இத்தோட்டமோ இவன் உடைமை --
இப்பொழுது கூட்டின் முடிச்சவிழ்க்கிறான் -
இரு குஞ்சுகளோடு கூட்டினையே இந்த ராவணன் தூக்கிச் செல்கிறான் -
ஓலமிடும் கூட்டோடு மறைந்து விடுகிறான் --
பாவி...! அந்தக் கூட்டிற்குள் என்ன இருக்கும் என்று கவர்ந்து செல்கிறாய் ?
அந்தக் குஞ்சுகள்தான் எப்போதோ ஓலமாய்த் தேய்ந்து ,கண்ணீராய்க் கரைந்து
பய வெம்மையில் ஆவியாகிப் போயிருக்குமே !
" அழுகுரல் எழுப்பும் சிறு குஞ்சுகாள் ! மென் நெஞ்சங்காள் !
சிறகு முளையாச் சிறு இதயங்காள் !
சிறுபோழ்தில் சிறகு முளைத்திடும் உங்கள் உயிர்களுக்கு ,உடல் அவனுள் சமாதி பெருங்கால்- .. ..
ஆண்டவனைக் கெஞ்சித் துதியுங்கள் -
வேண்டாம்..வேண்டவே வேண்டாம் !
அவனை நினைக்கவே வேண்டாம் ..சற்றும் நினையாதீர் அக்கொடியோனை !
எவன் சொன்னான் அவன் எளியோரைக் காப்பான் என்று ?..பொய்.-
எவன் புகன்றான் முறையீடுகளுக்குக் கடவுள் செவி சாய்க்கிறான் என்று ?-பொய் !
அவன் செவியிற் பறை இல்லை !
எவன் மொழிந்தான் அவன் பலசாலி என்று ?--பொய் !
இக்கொடும் மானுடனையே அவனால் வீழ்த்த முடியவில்லையே ?
அழுவதால் ஆய பயன் என்ன? அவன்தான் சென்று விட்டனனே !
குஞ்சுகாள் ! உங்கள் அழுகையின் ஆழம் அவன் மகிழ்வின் ஆரவாரமகின்றதே !
ஆனால் .....
நான் நிற்கிறேன் வாய்மூடி மௌனியாய் இன்னும் இதயம் கசக்கிப் பிழியும்
காட்சிகள் காண்பதற்கே --
[தொடரும் பகுதி-2 ]
----சந்திர கலாதர்

Saturday, July 2, 2011

Long Not For Appreciation....Proceed On Undeflected !

பாராட்டு ஏங்காதே ! உன் வழி செல் ...
உலகத்தின் மதிப்பீட்டை எதிர்நோக்குகிறாயா..
என் நண்பனே !
நிச்சயம் நீ மூடன் !
சற்றும் பொருட்படுத்தாதே --
கெஞ்சியும் கால்பிடிக்காதே !
கெஞ்சக் கெஞ்சக்
கடிகளே பெறுவாய் --
இகழ்ச்சி எக்காளமிடும் விழிகள்
உனைப் பார்த்துக் கொக்கரிக்கும்--
உன் பாதை எல்லாம்
வசைமொழிகள் விதைத்திருக்கும்--
ஏன் தெரியுமா ..
இது ஒரு கிறுக்கு உலகம் !
&
எனவேதான் சொல்கிறேன் --
நண்பனே ! நண்பனே !
அந்த அழகிய யாழினை
உன் கரங்கள் அணைத்திடு ;
அதன் ஒளிர் நுண் நரம்புகளில்
உன் உள்ளே இசைக்கும்
உணர்ச்சிகளின் ஸ்ருதிகளை
இசைவாகப் பாயவிடு --
ஆம் ..அந்தத் தேனினும் இனிய..தெய்வீக..
ஆன்மா கனியவிடும் கீதங்களின்
உயர்வு தாழ்வு ஆழங்களுக்கேற்ப
ராகப் பாலங்கள் இடு.
இசை வீதிகள் இயற்று --
உனது இசை நாதங்கள்
மரத்த செவி மந்த உலகினரால்
நுகர்வதற்கு அப்பாற்பட்டவை
என்பது உணர் .
&
உள்ளும் புறமுமாய்
இரு த்வனிகளும்
இயற்கையோடு சுந்தரமாய்
இயைந்து பரவட்டும் -
பரவசமூட்டும் உன் கீதங்களால்
உன் பாதைவெளி எல்லாம்
இனிய அதிர்வுகள் திகழட்டும் --
காற்று அணுக்கள்கூட
மென்மையான.. அமைதியான
உன் நாதச் சுவடுகளோடு
இணைந்து ஆடட்டும்.
&
தயங்காதே ! தளராதே !
உன் தனி வழியில்
தொடர்ந்து செல்--
திரும்பாதே உலகை நோக்கி ;
ஏன் எனில்....
உன் தலை குறி வைத்து
கற்கள் அம்பாக்கப்படும் --
ஏன் எனில்..
இது ஒரு கிறுக்கு உலகம் !
&
பளீர் எனப் பிரகாசிக்கும்
உன் அறிவின் முன்பு
கற்பனைக் கிண்ணம் வை--
உன் இதய நிலவின்
இனிய அமுதத்தை
அதனில் ஊற்று --
உன் தியான சக்தியால்
விரைவாகக் கடைந்தெடு --
அதில் சுற்றிச் சுழலும்
ஒளிரும் துளிகளின்
உன்னத மகிழ்வின்
பல்லவியைக் காண்--
உன் கீதங்களில் அதனைக்
கவர்ச்சியாய்க் கட்டு !
&
நல்லவற்றிற்கு இவ்வுலகம்
செவி சாய்ப்பதில்லை --
புது நறுமணம் அதன் நாசியைக்
கிளர்ச்சியுறச் செய்வதில்லை -
தன் சிறகுகளை இறுக்கிக்கொண்டு
பழகிய பழைய தடங்களிலேயே
ஊர்ந்து செல்ல விரும்புகிறது --
எனவே அது ..
உனை ஏற்று ஒரு வார்த்தை
பாராட்டாது இருப்பின்
கண்ணீர் ஒரு துளியும்
சிந்தி நில்லாதே .
&
உன் முயற்சிகளில்
சற்றும் தளராதே --
உன் யாழ் நரம்புகள்
சற்றே தளர்ந்து விட்டதா ?
உடன் முறுக்கேற்று --
விரைவாய் அதை மீட்டு ;
நரம்புகள் உன்னைப் பேசட்டும் !
மீதமுள்ள உன் வாழ்வுக் கோப்பை
கீதங்களால் நிரம்பி வழியட்டும் -
வாழ்வை முழுதாய் அனுபவி.
&
சிற்றுளியை எடு ;
கூர் செய் --
உன் சிறு உடம்பின் முன்
அமைதியும் கம்பீரமுமாய்
நிமிர்ந்து நிற்கும்
உயர் மலையைப் பார்--
இரவு பகலென அயர்வின்றி
அற்புதச் சிலைகளை
அழகாய் வடிவமை ;
சோர்வடையாதே --
தளர்ந்த நரம்புகளுக்கு
கற்பனை அமுதூட்டு--
&
இன்றிரவே ..
உன் சிறு படகைக் கட்டு--
கரைமீது இழுத்து வா ;
அன்பான அலைகள் அழைக்கையில்
கவிப் பேரானந்த மாக்கடலுள்
தள்ளி ஏறிவிடு-
உன் சிறு துடுப்புகளை
விரைவாக இயக்கு --
கடலுள் வெகு தொலைவு
முன்னேறிச் செல் --
இம் மணற்பரப்பைப்
பொருட்படுத்தாதே--
பொங்கும் மாக்கடலே
உன் உலகம் !
உன் கீதங்கள்
உல்லாச அலைகளின் பாடல்களே !
&
நீல மெத்தைக் கடலுள்
உன் பார்வை பாயட்டும் --
உன் விழிகள் எட்டிப் பிடிப்பது
அனைத்தும் படித்தறி--
இக்கரைச் சிந்தனையே இன்றிப்
புத்துலகங்கள்
புது மகிழ்வுகள்
புதுப் புகழ்கள் --
இவை நாடி அயராது துடுப்பிடு !
கரை திரும்பாதே -
ஏன் எனில்...
உன் சிறு படகைக்
கவிழ்க்கத் தயாராய்
யாராவது நிற்கக் காண்பாய் .
&
இரவின் ஸ்படிக அமைதியில்
தியானித்திரு --
மென்பனி பூசும்
இளம்காலைப் புத்துணர்வில்
மனம் வசம் செய் --
மாலைப் பொன் கனிவில்
கண் திறந்து
மனம் கூர் செய்--
உனது வேலைகளை
கூடாரமிடு --
ஏளன விழிகளுக்கு
உணவாகாதே !
எழுச்சி கனிவு எண்ணங்கள்
வற்றாது உன்னில் சுரந்து
உன் உறுதிப் பேனாமுனை கசிந்து
சாதனைகள் புரியட்டும் --
உன் நதியின் ஜீவன்
வற்றிப்போக விடாதே !
&
உணர்ச்சிமயமான உன் இதயத்தின்
பொறுமையான படைப்புகளைப்
படிக்கிறார்களா என நீ
வேவு பார்க்காதே --
அது உன்னை அரிக்கும் ;
கவலை சேர்க்காதே --
தொடர்ந்து தொடர்ச்சியாய் எழுதுவதே
தலையாய கடமை என்று கொள்.
உன் எழுத்துக்கள் கம்பீரமாய்
முகத்துக்கு முகம் காட்டி
உயரிய சிகரங்களை எதிர் காணட்டும் !
&
உறங்கும் உலகம்
விழித்திடும் முன்
சீறிப் பொங்கும் இதயத்தின்
வெள்ளம் அனைத்தையும்
கவிதை ஆற்றில் பாயவிடு !
அனைத்திற்கும்
அழகிய வடிவம் ..
நெடிய உயிர் ..
குன்றா ஒளி ..
வனப்புச் சிறகுகள் ..
அமைத்துக் கொடு --
அவற்றை எல்லாம்
தங்கக் காலையின்
எழிலார் வானில்
விடுதலை செய் !
&
அவை எல்லாம்
வண்ணச் சிறகுகள் படபடக்க
ஆனந்தச் சிலிர்ப்பில்
மத்தாப்புச் சிதறலாகட்டும்!
ஆன்மா பரவசப்படுத்தும் பாடல்களை
இதயம் திறந்து கூவட்டும் !
விண்ணில் ஏறித்
தொடுவானுள் தாழ்கையில்
செல்லும் திக்கெட்டும்
உன் படைப்பின்
மென் நறுமணம் தெளிக்கட்டும் --
&
அதுகாறும் நண்பனே !
மெய் வருத்தம் பாராய் !
கண் துஞ்சாய் !
-----சந்திர கலாதர்

Friday, July 1, 2011

IT IS UNBELIEVABLE !

நம்ப முடியவில்லை !
             
                  &

இளங்காலைக்  காற்றில்
வேப்ப மரத்தடியில்
இனிமையாய்ப்   புரண்டிட
இமை இறக்குகையில் --

எதிர் வீட்டுச் சிறுவன்
பதற்றமுடன் எழுப்புகிறான் --
" ராஜீவ் காந்தி செத்து விட்டார் !
நேத்து ராத்திரி ஸ்ரீ பெரும்பூதூரில்
பத்தரை மணிக்குக் கொலையுண்டார் ! "

நம்பவில்லை--
நம்பத்தான் கூடுமோ ?
சிறுவன் சிதறிய சேதியைச்
சிரிப்பில் எற்றித் தள்ளுகிறேன் --

"யாரிடமடா ஏமாற்று வேலை ?
நூல் சுற்றுகிறாயா ? "
" உண்மை! உண்மை !" என
விழிகள் பதறுகையில்
விழி ஓரங்களில்
உதட்டு அசைவுகளில் 
விஷமங்கள் தேடித் திரிகிறேன்  !

 "தமிழ் நாட்டிலாவது...
அதுவும் திருபெரும்பூதூரிலாவது ...
அதிலும் ராஜீவையாவது.
அதுவும் கூடக்   கொல்வதாவது ? 
பூ சூட்டடா
வேறு பெரும் காது பார்த்து..! "

சிறுவன் திகைக்கிறான் -
சொன்னதையே  சொல்கிறான் ;
அவனுக்கே என் சொல்லால்
அவன்மீதே அவநம்பிக்கை -

நிமிடங்கள் நகர்ந்தபடி
மெல்லப் பேசத் துவங்கினவே --
நம்பிக்கை மலை ஒன்றின்
நாடி தளர்கிறது--

தெருவோடும் மௌன நதிதனில்
சிறுசிறு குமிழ்களாகச்
சேதி வெடிக்கையிலே
நம்பாமல் நம்பத் துவங்கி
சோகச் சுழி சிக்கித் தவிக்கின்றேன் !

உண்மையே ! கொடு  நஞ்சே !
நெஞ்சு விழுங்க முடியலையே.---
இதயம் தாளலையே --
இளைஞன் ஒருவனின்
அழகான சரித்திரத்தை
செங்குருதியில் தோய்த்தாயே--.

எளியோரை ஏற்க நினைத்தானை
தாய்மடியில் துண்டு போட்டாயே---.
தேசத் தாய் காக்கக்
கைகேட்டு வந்தானைச்
சிலைத் தாயும் துடித்திடக்
கூறு போட்டது என்ன நீதி ?

கொலைக் கும்பல் இன்று
சிங்களம் இருந்திறங்கி
புலி வேடமிட்டு வீரர் போர்வையிலே
குருதி வெறி கொண்டு
அலைகின்ற தமிழ்க் காட்டினிலே,
வெண்புறாவே  --
அன்பேந்தி மட்டும் ஏன் வந்தாய் ?

தமிழ்நாடே !
தூய உன் சரிதை இன்று
தீக் காயம் கொண்டதுவே..!
இந்திய வரலாற்றில் இன்று
தலைக் குனிவாய்  ஏன் ஆனாய் ?

தாயே !
எவ்வேளைதனில் நீ ஜனித்தாய் ?
எவ்வேளைகளில் இரு மைந்தரையும்
பெற்றளித்தாய் இந்நாட்டிற்கு ?
மூவருமே இயற்கையாய்
இயற்கை எய்திடாது
முழு உடலை இம்மண்ணில்
சரியாது போனதென்ன ?
தேச நலன் கருதி
 செங்குருதிச் சாரல்களைப்
பூமியில் சொரிந்ததென்ன ?

ஏ ..பாதகியே !
கொடியாளே 1
கல் நெஞ்சினளே !
அன்பு முகம் பார்க்க வந்த     
அனைவரையும்  கொன்றாயே --
என்ன செய்தார் அவர் பாவம் ?

ரத்தவெறி கொண்ட
பேடி நாயே --
எவர் பின்னால் ஏவியவர் ?
எவ்விலைக்கு உனை விற்றாய் ?

துப்பாக்கிக் கொலைஞர்களை
விடுதலை வீரராக்கிப்
புலிக் கோடிட்ட தமிழகமே !
நன்றாகத் தலை குனிவாய் ..!

--சந்திர கலாதர்
     [ மே ,1991 ]

   

  
  

Thursday, June 30, 2011

Murder Of Rajiv Gandhi In 1991

ராஜீவ் காந்தியின் படுகொலை


கோழைக் கும்பலின்
கோரச் செயலால்
கமல முகத்தான்
கருகிச் சிதைந்தனனே  ...!
அந்தோ ! என்னென்பேன் --
ரத்தப் புயலில்
அன்பின் தீபம்
அணைந்தே போனதம்மா..!
நாட்டின் நலம் எண்ணி
வெடிமொழி ஒடுக்க
எழுந்தனள் வீறுடன்
அன்று உனதன்னை.. 
நெஞ்சிற்  குண்டேந்தி
ரத்தக்     களறியாய்     
இடுப்பில் உடைந்தே  
இம் மண்ணில் சரிந்த 
ரத்தமும் உலரவில்லை...!
சற்றும் அயர்வின்றி
இராப்பகல் இன்றி 
நிலை அரசு ஒன்றினை 
நாட்டிற்கு நயந்திட 
திக்கெல்லாம் கரம் கூப்பி 
கைகேட்டு வந்த உனை 
தமிழ்  நாட்டின் தலைக் குனிவாய்
இருள் நெஞ்சப் பதர் ஒன்று 
இருள் வேளை கொன்றதடா..!
பிண நரிகளின்  நய  வஞ்சகம்  
மறுபடி வென்றதையோ...!
என்ன வேதனை இது ?
ஓர் குடும்பமே 
கொலை வாயில்..!
நாட்டின் நல்லோரே --
காந்தி மகான் பெயர் கொண்டால் 
படுகொலைதான் பரிசாமோ ?

----சந்திர கலாதர்         
   

21, May , 1991 , A Cruel Night..

1991,மே  21.
இரவு..
கொடும் விதி எவ்வளவோ தடைகளைச்  மீறிச் சமாளித்து   
நாட்டின் பெருமகன் இளைஞன் ராஜீவை
திருபெரும்பூதூரின் இருட்டு மூலைக்கு இழுத்து வந்தது --
பொய்யாய்ப் புன்னகைத்துப்
 பூ ஆரம் சூடுவதாய்ப் பெண்ணிடைப் பேய்  
 ஒன்றையும் நிறுத்தி   வைத்தது--
வஞ்சக நெஞ்சங்கள் பார்வைப் பின்னல்களை இறுக்கமாய்ப் பின்னிடவும் வைத்தது --
கொடிய நொடியில், வெடியின் துடிப்பில் 
இளைய ஞாயிறு  ஒன்று இருளில் சுக்கல் சுக்கலானது --
இருள் ரத்தத்தால் சிவந்தது -
இந்தியாவின் கண்ணீர்த் துளிபோலும் 
இலங்கை கண்களைக் குத்தி விட்டதே !
தமிழே ! உனக்கேன் இந்த இழிவு ?
நம்பத்தான் முடிகிறதா ?
கொடுமையை ஏற்கத்தான் துணிகிறதா மனம் ?
அந்நிலையில்.... 
              
               &

ஓர் அழகிய இளைஞனின் 
அற்புத வாழ்வை 
அரைகுறை ஆக்கி விட்டார்;
தன் அகம் தமிழகம் என 
நெஞ்சகம் நம்பி
அன்பகம் காட்டி 
அருட்கை வேண்டிய 
புன்னகைப் பறவையைத்
தாய்க்குலம் ஒன்று
பூக்குலம்  தருவதாய்ச்
சீழ்க் குணம் கொண்டு
பெற்றதாய் சிலைமுன்பு 
உயிரைக் குடித்ததம்மா !
ஒ..! இது
ஆண்மை இழந்த
அதமப் புலிகளின்
அற்பச் செயலம்மா..
தமிழே தலை தாழ்ந்ததம்மா....!

-----சந்திர கலாதர்    
            

Is This Fair On My Part ?

நியாயம் தானா இது ?
             
&&
 
இதில் நாம் என்றோ நீங்கள் என்றோ குறிப்பிட்டால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் . ஆனால் இது எல்லோருக்குமே பொருந்தும் .
இருப்பினும் இங்கு நான் என்றே குறிப்பிட்டு கொள்கிறேன் --
             
&&&
 
நான் என்றோ மனம் இசைகையில் உடற்பயிற்சியோ அன்றி யோகாசனமோ கால் மணியோ/அரைமணியோ செய்துவிட்டு நாலு பேர் மத்தியில் தினமும் ஒரு இரண்டு மணி நேரமாவது விடாமல் நான் ஆசனம் செய்கிறேன் என்று கூசாமல்
கர்வமாய்ப் பீற்றிக் கொள்கிறேன்--
"உனக்கு மனச்சாட்சியே கிடையாதா? "--என்னுள் குரல் கேட்கிறது
என்றோ ஒரு நாள் ஓர் கை ஏந்தி நிற்கும் வயோதிக ஜீவன் ஒன்றுக்கு மிக ஈன நாணயம் தேடித் துருவிப் போட்டு விட்டு நாலு பேரிடைப் பெரிய வள்ளல்போல் பெருமை பேசுகிறேனே --
"அடப் பாவி ! " என்றொரு குரல் அடிவயிற்று ஆழத்திலிருந்து எழுகிறது .
ஆண்டுத் துவக்கத்தில் அலுவலகத்தில் எந்த நிறுவனத்தான் நாட்காட்டியோ,நாட்குறிப்பேடோ, அன்புப் பரிசோ அளிக்கமாட்டனா என நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாலேயே அலைந்து திரிந்து விட்டு ,நாலு பேரிடைக் கையூட்டுக் கொடுமை பற்றி வாய் கிழியப் பேசுகையில் --
" நீயெல்லாம் உருப்படுவாயாடா ! " என என்னுள் காது கிழியச் சத்தம் கேட்கிறதே!
எளிய வாழ்வும் நடைமுறைகளையும் பற்றி காந்தி மகான் போல் போதனை செய்து வேஷமிட்டபடியே ஆடம்பர அலங்காரக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ' பளிச் பளிச் 'க்களில் ' பட்டும் பொன்னும் 'போட்டிபோட , நான் என் வீட்டிலேயே அரங்கேற்றுகையில் -
" என்ன வஞ்சகனடா நீ ! வெட்கமாயில்லை ? "என என்னுள் ஒன்று பொருமுகிறதே--
பேருந்துகளில் துண்டுபோடுவதுபோல் கூட்ட நெரிசலில் என் குடும்பத்தினருக்கு இடம் பிடித்துவிட்டு ,"இந்த ஜனங்க திருந்தவே மாட்டாங்க ! " என்று தான் இம்முயற்சியில் தோற்கையில் நீதி புலம்புகையில் --
 
" ஹாஹாஹ்ஹாஹா ! " என்று வாயொலியோடு கை ஒலியும் கேட்கிறதே!
அப்போது என் தலையும் குனிகிறதே !
-----சந்திர கலாதர்

Tuesday, June 28, 2011

When Migratory Birds Grace The Skies !

நீர்ப்பறவைகள் வானில் நீந்துகையில் ..!


பூர்ணிமை நிலவு ...
கீழைத் தொடுவானில் பூத்துவிட்டது--
குளிர்ப்பொழுது;
நிலவுப்பூ மலரும் வேளையில் கண்டு களிக்கும் பாக்கியம்
கிட்டவில்லையே ! .
சற்று நேரம் தாழ்த்திவிட்டேனே !
முகிற்கூட்டங்கள் குழுமி நின்று நிலவின் மணம் நுகர்ந்து மெய்மறந்து நிற்பனவோ ?
அணியணியாய் நீர்ப்பறவைகள் மாலை அந்தி வேளைகளில்
வானில் மிதந்து நீந்திச் செல்கின்றன --
நீர்நிலைகளை நாடி நிலம்விட்டு வான் எழும்பி ஒழுங்காய் ,அமைதியாய்ச் செல்கின்றன இதோ கரும் கொக்கினங்கள் --
இறைவா ! இப்பறவைகளைத்தான் எவ்வளவு அழகாக நீ படைத்துவிட்டனை !
வான்வெளிக்கே அழகு ஊட்டிக்கொண்டு அவை பறந்து செல்கையில் என் உள்ளம் எவ்வளவு பாடுபடுகிறது ?
ஏன் அங்குப் புரியாததொரு வேதனை வந்து புகல் வேண்டும்?
அடுத்த பிறவியில் என்னை இப்பறவைகளில் ஒன்றாய்ப் படைத்துவிடு--
இதயம் மகிழப் பறந்து ..ஆசைதீரப் பாடி வாழ்வை நுகர வேண்டும்-- கடற்பரப்பில் முன்னேறிவரும் நீள் அலைகள்போல் ....
ஆனால் சற்றும் ஓலமின்றி ..
புல்வெளியில் வளைந்து வளைந்து செல்லும் கருநாகப் பாம்பின் நெளிவு அசைவுகள் போல் பல நெளிவுகள் ஒடியாத தொடர்வாகப் பெற்று ...
ஆனால்,மிகத் தெய்வீகமாய் ...
எங்கோ பறந்து செல்லும் அவைகளைக் காணுறும்போதெல்லாம் ,
என் உள்ளம் எனை நீங்கி அவற்றைத் தொடர்ந்து செல்கின்றன !
என் பார்வையால் அவைகளைத் தொடர்ந்து செல்ல இயலவில்லை என்பதை உணர்கையில் இதயம் எவ்வளவு துணுக்குறுகின்றது !

----சந்திர கலாதர்