Thursday, October 13, 2011

i suffer from a disease

எனக்கோர் நோய்
&
இளம் பிராயத்தில் இருந்தே நான் ஒரு நோயால் அவதிப் பட்டு வருகிறேன் ..
அதை இனம் கண்டு சொல்ல எனக்கு அன்று சொற்கள் இல்லை ..
பூத்துக் குலுங்கும் ஒரு மலர்ச் செடியை நெருங்குவேன் ..
ஆனால் பூக்களைப் பறிக்கவோ அல்லது செடியை/மரத்தை உலுக்கி
மலர்களை வீழ்த்திச் சேர்க்கப் பிடிக்காது .
அப்படியே அசைத்தாலும் பாராட்டு மென்மைத் தட்டுதலாகவே அது அமையும்.
மரத்திற்கு வலிக்குமே என்று மனம் புண்படும் .
மயிலிறகுத் தடவலாய் பூக்களை வருடி முத்தம் கொடுப்பேன் ..
சிறிது பேசுவேன் ..கையசைத்து விடை கொள்வேன் ..
தங்கரளி,பன்னீர்ப்பூ ,பவழ மல்லி இவைகள் எல்லாம் எனக்கு மிகப் பிடிக்கும் .
ஏன்? அவைகள் எனக்காகவே தானாக உதிர்ந்து கோலமிட்டு இருப்பதாக
மிக உண்மையாக எண்ணி குவித்து அள்ளாமல் வலிக்காமல் ஒவ்வொன்றாய்க் காம்பு பிடித்துச்சேர்ப்பேன் ..
எல்லா மலர்களையும் ஆராய்வேன் ..
எத்தனை புற ,அக இதழ்கள் ,மகரந்த ஸ்தம்பங்கள் ,அதன் மையமாய் பெண் கொடி இழை ,வண்ணச் சிதறல்கள் ,பல மலரிடை ஒற்றுமை வேற்றுமைகள் எனக் கணிப்பேன் .
நேரம் போவதே தெரியாது ...
மலரை பறித்தால் அதற்கு வலிக்குமே என ஜகதீஷ் சந்திர போஸ் நிழலாடுவார்.
இலைகளை ,மரத்தை அணைத்துக் கொள்வதில் நான் பெரும் சுகமே அலாதியானது ..
இதனை ' இயற்கை நோய் ' என்று சொல்லலாமா ?
இந்த நோய் என்னில் என்றும் இருந்துவிட்டுப் போகட்டுமே !
--

No comments:

Post a Comment