1991,மே 21.
இரவு..
கொடும் விதி எவ்வளவோ தடைகளைச் மீறிச் சமாளித்து
நாட்டின் பெருமகன் இளைஞன் ராஜீவை
திருபெரும்பூதூரின் இருட்டு மூலைக்கு இழுத்து வந்தது --
பொய்யாய்ப் புன்னகைத்துப்
பூ ஆரம் சூடுவதாய்ப் பெண்ணிடைப் பேய்
பூ ஆரம் சூடுவதாய்ப் பெண்ணிடைப் பேய்
ஒன்றையும் நிறுத்தி வைத்தது--
வஞ்சக நெஞ்சங்கள் பார்வைப் பின்னல்களை இறுக்கமாய்ப் பின்னிடவும் வைத்தது --
கொடிய நொடியில், வெடியின் துடிப்பில்
இளைய ஞாயிறு ஒன்று இருளில் சுக்கல் சுக்கலானது --
இருள் ரத்தத்தால் சிவந்தது -
இந்தியாவின் கண்ணீர்த் துளிபோலும்
இலங்கை கண்களைக் குத்தி விட்டதே !
தமிழே ! உனக்கேன் இந்த இழிவு ?
நம்பத்தான் முடிகிறதா ?
கொடுமையை ஏற்கத்தான் துணிகிறதா மனம் ?
அந்நிலையில்....
&
ஓர் அழகிய இளைஞனின்
அற்புத வாழ்வை
அரைகுறை ஆக்கி விட்டார்;
தன் அகம் தமிழகம் என
நெஞ்சகம் நம்பி
அன்பகம் காட்டி
அருட்கை வேண்டிய
புன்னகைப் பறவையைத்
தாய்க்குலம் ஒன்று
பூக்குலம் தருவதாய்ச்
சீழ்க் குணம் கொண்டு
பெற்றதாய் சிலைமுன்பு
உயிரைக் குடித்ததம்மா !
ஒ..! இது
ஆண்மை இழந்த
அதமப் புலிகளின்
அற்பச் செயலம்மா..
தமிழே தலை தாழ்ந்ததம்மா....!
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment