Friday, March 9, 2012

பனி முத்துக்களாய்க் கற்பனைகள்
'படபட' என வடிவங்களாய்--
சளைக்காமல் எழுதுகிறேன்
எவர் படிப்பார் தெரியவில்லை
அதனால் சோர்ந்தும் போகவில்லை-
என்றோ ஓர் நாள் எவரோ ஒருவர்
அரைக்கால் வார்த்தையில் வியக்கின்றார் -
நினைத்துக் கொள்கிறேன்
எவரோ சிலர் படிக்கின்றார்
தவறாது நன்றி நவில்கின்றேன் -
சிறு புள்ளி பிளந்த வார்த்தைதான்
எனினும் என்னில் எத்தனை உற்சாகம் !
கவிதையின் உரைநடையா ?
உரைநடையின் கவிதையா ?
எப்படி இருந்தால் எனக்கென்ன ?
என் எண்ணங்கள் மலருதடி !
எவர் பார்க்கின்றார் புற்பூக்களை ?
எனினும் சிறிதாய்ப் பூக்கிறதே !
வானத்தோடு கை கோர்க்கிறதே !
பல வரிகளில் என்னைக் கொட்டுகிறேன்
பார்ப்பவரோ ஒரு சிலர்தான் -
அரைச் சொல் சிலர் அவிழ்த்தாலும்
ஆயிரம் பேர் வழி மொழிவார்
அந்த ரகசியம் நான் அறியேன்
அத்திறமையாளரை வியக்கின்றேன்
உலகின் விருப்பம் வெறும் ' ஹாய் ' தானோ !
---சந்திர கலாதர்

No comments:

Post a Comment