Monday, October 31, 2011

it is on the seashores the languages wither.

it is on the seashores the languages wither.
&
the countless wavelets that snake on the sandy shores
generate the 'hahas' and the 'hohos' from the delighted kids;
sure i am ,they know the sweet names of all these kids
and shake hands with toothy smile with the hiss of kisses abound
and liberal gifts of silvery shells ,their worth the kids alone know !
it is on the seashores the languages wither in the blossoms of universal dance!
----s.chandra kalaadhar

--

Thursday, October 13, 2011

SITTING BEFORE AN INFANT

ஒரு பச்சைக் குழந்தையின் முன்
&
நாட்களின் விரைவு நடையில் மாதங்கள் இரண்டு சட்டென ஓடிவிட்டன ;
இரு மடங்கு விரைவாய்க் குழந்தையின் அழகும் வசீகரமும் போட்டிநடை காட்டி இருக்கின்றன ;
கொழுத்த கன்னங்களின் குழிவும் ,சொப்பு வாய் நெகிழ்த்தும் பொக்கைச் சிரிப்பும்
கீழ இமைக்குள் சற்று மூழ்கும் விழி நிறைக்கும் இரு கறு வண்டினமும்
அவற்றின் நக்ஷத்திர ஒளித் தெறிப்புகளும்
இரு சிட்டுக் கால்களையும் ஓர் நேர்த்தியான விரைவில் தன்னுள் இழுத்து
மின்னல் விரைவில் மறுநொடியே வெளி உதைப்பதுவும்
பக்கம் சாய்ந்து ஆழ் தூக்கத்தில் அமிழும் அமைதியும் ..
ஓ ..வார்த்தைகளே ! எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள் ?
எப்படி இந்த அழகை நான் எடுத்துரைப்பேன் ?
தன் கனவு ஒன்றின் மையத்தில் அரைக்கால் சிரிப்பினை உதட்டினில் சுண்டி
மறுநொடி பட்டு இமைகளில் ஒரு இறுக்கம் காட்டி
ஓசையிலா ஓர் அழுகைத் துண்டை விசிறி
மனம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தாய் அமுதம் விரும்பி
உதடுகளைக் கூட்டி வைத்து உண்மையேபோல் உறிஞ்சி நிறைவதும்
ஒவ்வொரு நொடியும் இறைவன் மட்டுமே அறியக்கூடும் நுண்ணிய வளர்ச்சி பெறுவதும் --
ஓ சுற்றி உள்ளோர் இதயங்களை எல்லாம் மலர வைக்கும் சிறு தேவதையாய்
சில முரட்டுப் பெண் மனங்களிலும்கூடத் தாய்மை உணர்வைப் புரள வைக்கும் அற்புதமாய் ..
&
' மொழியே ! நான் திணறுகிறேன் ; நீ எங்கே? '
'மகனே ! வார்த்தை வேண்டி இக் குழந்தை முன்னேயே நான் தவம் கிடக்கிறேன் ,தெரியலையா !
&
-----சந்திர கலாதர்

i suffer from a disease

எனக்கோர் நோய்
&
இளம் பிராயத்தில் இருந்தே நான் ஒரு நோயால் அவதிப் பட்டு வருகிறேன் ..
அதை இனம் கண்டு சொல்ல எனக்கு அன்று சொற்கள் இல்லை ..
பூத்துக் குலுங்கும் ஒரு மலர்ச் செடியை நெருங்குவேன் ..
ஆனால் பூக்களைப் பறிக்கவோ அல்லது செடியை/மரத்தை உலுக்கி
மலர்களை வீழ்த்திச் சேர்க்கப் பிடிக்காது .
அப்படியே அசைத்தாலும் பாராட்டு மென்மைத் தட்டுதலாகவே அது அமையும்.
மரத்திற்கு வலிக்குமே என்று மனம் புண்படும் .
மயிலிறகுத் தடவலாய் பூக்களை வருடி முத்தம் கொடுப்பேன் ..
சிறிது பேசுவேன் ..கையசைத்து விடை கொள்வேன் ..
தங்கரளி,பன்னீர்ப்பூ ,பவழ மல்லி இவைகள் எல்லாம் எனக்கு மிகப் பிடிக்கும் .
ஏன்? அவைகள் எனக்காகவே தானாக உதிர்ந்து கோலமிட்டு இருப்பதாக
மிக உண்மையாக எண்ணி குவித்து அள்ளாமல் வலிக்காமல் ஒவ்வொன்றாய்க் காம்பு பிடித்துச்சேர்ப்பேன் ..
எல்லா மலர்களையும் ஆராய்வேன் ..
எத்தனை புற ,அக இதழ்கள் ,மகரந்த ஸ்தம்பங்கள் ,அதன் மையமாய் பெண் கொடி இழை ,வண்ணச் சிதறல்கள் ,பல மலரிடை ஒற்றுமை வேற்றுமைகள் எனக் கணிப்பேன் .
நேரம் போவதே தெரியாது ...
மலரை பறித்தால் அதற்கு வலிக்குமே என ஜகதீஷ் சந்திர போஸ் நிழலாடுவார்.
இலைகளை ,மரத்தை அணைத்துக் கொள்வதில் நான் பெரும் சுகமே அலாதியானது ..
இதனை ' இயற்கை நோய் ' என்று சொல்லலாமா ?
இந்த நோய் என்னில் என்றும் இருந்துவிட்டுப் போகட்டுமே !
--